முடி அடர்த்தியாக வளர இலகு வலி!


முடி அடர்த்தியாக வளர இலகு வலி!

உறுதியான கூந்தல் வளர்ச்சிக்கு வைட்டமின் சத்துக்கள் மிகவும் அவசியம் அதேபோல் இரும்பு சத்து, துத்தநாகம், கொழுப்பு சத்து மற்றும் புரதச்சத்துக்களும் கூந்தல் வளர்ச்சிக்கு மிகவும் அவசியம். இந்த அனைத்து சத்துக்களும் முடி உதிர்வு பிரச்சனையை நீக்கி முடியை ஆரோக்கியமாகவும், அடர்த்தியாகவும் வளர செய்யும்.

முடி வளர வைட்டமின் உணவுகள்:-


வைட்டமின் A:-

தலைமுடி வளர்ச்சிக்கு வைட்டமின் ஏ சத்து உதவுகிறது. இந்த வைட்டமின் சத்துக்கள் கேரட், பப்பாளி, அத்திப்பழம், ஆப்ரிகாட் ட்ரை ஃபுரூட்ஸ் போன்றவற்றில் அதிகளவு நிறைந்துள்ளது. இதனை தினமும் சாப்பிடுவதன் மூலம் தலைமுடி வளர்ச்சியை அதிகரிக்கலாம்.

வைட்டமின் B5:-

கூந்தல் வளர்ச்சிக்கு வைட்டமின் B5 சத்து மிகவும் அவசியம். இந்த வைட்டமின் B5 சத்துக்கள் முட்டை, மஷ்ரும், சர்க்கரை வள்ளி கிழங்கு, காலிபிளவர் போன்ற உணவுகளில் அதிகளவு நிறைந்துள்ளது. இந்த உணவுகளை அதிகளவு தினமும் உட்கொள்வதினால் முடி வளர்ச்சியை அதிகரிக்கலாம்.

வைட்டமின் C:-

வைட்டமின் சி உணவுகளை அதிகளவு உட்கொள்வதினால் கூந்தலின் வளர்ச்சியை அதிகரிக்கலாம். இந்த வைட்டமின் சத்துக்கள் எலுமிச்சை, நெல்லிக்காய், முலாம்பழம், கொய்யா, ஸ்ட்ராபெரி, ஆரஞ்சி போன்ற பழங்களில் அதிகளவு நிறைந்துள்ளது.

இந்த பழங்களை தினமும் சாப்பிடுவதன் மூலம் நம் உடலுக்கு இயற்கையாகவே வைட்டமின் சி சத்துக்கள் அதிகரிக்கப்படும். இதனால் கூந்தலின் வளர்ச்சி தூண்டப்பட்டு கூந்தல் அடர்த்தியாக வளர ஆரம்பிக்கும்.

வைட்டமின் E:-

அதேபோல் வைட்டமின் ஈ சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ள அவகோடா, ஆப்ரிகாட் (Apricot), பாதாம், wheat germ oil, சூரிய காந்தி விதைகள் போன்றவற்றில் அதிகளவு உள்ளது.

எனவே இவற்றையெல்லாம் தினமும் உட்கொள்வதன் மூலம்  முடி உதிர்வதை தடுப்பதோடு, தலைமுடியை வளமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகின்றன.


முடி அடர்த்தியாக வளர இலகு வலி! முடி அடர்த்தியாக வளர இலகு வலி! Reviewed by Google தமிழச்சி on July 15, 2020 Rating: 5
Powered by Blogger.