கடலைமாவின் மருத்துவ குணங்கள்

கடலைமாவின் மருத்துவ குணங்கள்

அழகை பேணி காப்பதில் கடலை மாவிற்கு முக்கிய பங்கு உள்ளது. பொலிவிழந்த சருமத்தை இளமையூட்டும் தன்மை கடலை மாவிற்கு உண்டு. 

தினமும் முக அழகிற்கு, கடலை மாவு பயன்படுத்தி வந்தால் நல்ல மாற்றத்தை உணரலாம்.
கடலை மாவுடன் கொஞ்சம் வெள்ளரி சாறு கலந்து நன்கு குழைத்து பாதிப்பு உள்ள சரும பகுதிகளில் நன்கு பூசவும். பின் இருபது நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவி விடவும். சருமம் வழுவழுப்புடன் திகழும்.

கடலை மாவில் சிறிது நீரை கலந்து, முகத்தில் பூசி கொள்ளுங்கள். நன்கு உலர்ந்த பின்பு குளிர்ந்த நீரால் கழுவுங்கள். இவ்வாறு செய்து  வருவதனால் முகத்தில் உள்ள சுருக்கங்கள் மறையும்.

குளிக்கும் போது சோப்பிற்கு பதில் கடலை மாவை பயன்படுத்தி வந்தால், சருமம் வளுவளுப்பாக இருக்கும். கடலை மாவுடன், மஞ்சள் மற்றும் 1 ஸ்பூன் பன்னீர் கலந்து முகத்தில் பூசி கொள்ளுங்கள். பிறகு 20 நிமிடம் கழித்து, முகத்தை கழுவினால் முகம் பிரகாசமாக  ஜொலிக்கும். 

கடலை மாவுடன் பாதாம் பவுடர் மற்றும் எலுமிச்சை கலந்து குழைத்து முகம் முழுவதும் பூசி 30 நிமிடம் அப்படியே விடவும். பிறகு குளிர்ந்த நீரில் கழுவி விடவும். இதன் மூலம் முகம் பிரகாசமாக தோன்றுவதுடன் சரும ஆரோக்கியமும் மேம்படும்.

கடலை மாவுடன் சந்தனம், ரோஸ் வோட்டர், தேன் கலந்து முகப்பூச்சு செய்தால் முகத்தில் உள்ள அழுக்குகள், இறந்த செல்கள் வெளியேறுவதுடன் சருமம் மென்மையும் வழுவழுப்பும் பெறும்.

குறிப்பு: திருமணம் போன்ற விஷேஷ நாட்களுக்கு முந்தய நாள், கடலை மாவு, மஞ்சள் கலந்த முக அழகு குறிப்பினை பயன்படுத்தினால்  முகம் பேசியல் செய்ததற்கு இணையாக ஜொலிக்கும்.

கடலைமாவின் மருத்துவ குணங்கள் கடலைமாவின் மருத்துவ குணங்கள் Reviewed by Google தமிழச்சி on December 11, 2019 Rating: 5
Powered by Blogger.